HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4756 - 4760 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4756 – 4760 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4756 – 4760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4756. தானான போகரிஷிமுனிவர்தானும்
தண்மையுள்ள பெண்களுக்கு வுபதேசிப்பார்
கோனான நவகண்ட ரிஷியார்தானும்
குறிப்புடனே தாமுரைத்த வண்மையாவும்
மானான ரேணுகையாள் லீலாகற்பம்
மகத்தான குருக்கள்மார் ரிஷிகள்சித்தர்
பானான யின்னம்வெகு
மாண்பரெல்லாம் பாருலகில் கேட்டகதை பகருவாரே
விளக்கவுரை :
4757. பகருவார் நாலுயுக காலந்தன்னில் பண்பான திரேதாயினுகத்திலப்பா  
நுகரவே ரேணுகையின் மாயலீலை
நுட்பமுடன் சீனபதிப்பெண்களுக்கு
சிகரம்வரை கிக்கிந்தா
மலையைநாடி தீரமுடன் நவகண்ட ரிஷியார்தம்மை
தகரவே தாள்பாதங்
கிட்டிநின்று சாங்கமுடன் பணிந்திட்டேன் ரிஷியார்காணே
விளக்கவுரை :

[ads-post]
4758. காணவே ரேணுகையின்
மார்க்கந்தன்னை கடிதான சீனபதிப்பெண்களுக்கு
பூணவே செய்தியெல்லாம்
தானுரைத்து பொங்கமுடன் மகிகைதன்னைக் கூறுவார்காண்
தோணவே தேசாதி தேசமெல்லாம்
துப்புரவாய் வலசாரி யிடமதாக
நீணவே தேசமெலாம்
குளிகைகொண்டு நீதியுடன் சுற்றி வதிசயங்கண்டேனே
விளக்கவுரை :
4759. கண்டேனே ரேணுகைபோல்
மாயாசித்து காசினியில் எங்கேனுங் கண்டதில்லை
அண்டர்முனி ராட்சதர்கள்
அனேகங்கண்டேன் அகிலமதில் வெகுகோடி சித்துகண்டேன்
புண்டரீகமானதொரு
கிருஷ்ணாவதாரன் பூவுலகில் அதிசயங்கள் சொல்லொண்ணாது
தண்டவள ரிஷிகளெல்லா
மனேகசித்து தாரணியில் செய்தவருங் கோடிபேரே
விளக்கவுரை :
4760. கோடியாம் வெகுகோடி
வதிசயங்கள் குவலயத்தில் கண்டதுண்டு யிதுபோலில்லை
தேடியே தேசமெலாஞ்
சுற்றிவந்தேன் தெளிவான ரேணுகைபோல் சித்துமுண்டோ
வாடியே போகாத மாயசித்து
வளமையுள்ள காயாதிகொண்டமாது
நீடியே நீணிலத்தில் ரிஷியார்தம்மை
நீதியுடன் வலதழித்த சித்துமாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments