HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5501 - 5505 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5501 – 5505 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5501 – 5505 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5501. வித்தையா மின்னமொரு மார்க்கங்கேளு
வேதாந்தப் புண்ணியனே விளம்புவேன்பார்
சித்திபெற காலாங்கி
நாதர்வாக்கு சீருலகில் பொய்யாது மெய்யேயாகும்
சத்தியமாங் காலாங்கி
சொன்னநீதி சதாகால மெந்தனுக்கு குருவாக்காகும்
நித்தியமும் அந்திசந்தி
பாதம்தொட்டு நினைக்கிறேன் போகரிஷி நினைக்கிறேனே
விளக்கவுரை :
5502. நினைக்கிறேன்
ஸ்ரீலீலாவினோதந்தன்னை நிலையான கருமான மேதென்றாக்கால்
கனையான மலையோரந்
தேடிப்போனால் சுருக்கான வாத்தலரி வேர்தானுண்டு
தினைபோலே வித்துள்ள
மலைதாங்கியப்பா சிறப்பான திருநீற்று சூலியாகும்
பனைபோன்ற வேரதனை
வெள்ளிதன்னில் பட்சமுடன் காப்பதுவுங் கட்டிடாயே
விளக்கவுரை :

[ads-post]
5503. கட்டியே காப்பதுவுந்
தீர்ந்தபின்பு கணேசருக்குப் பொங்கலிட்டு காவுதந்து
எட்டியுட வடவேரைத்தான்
பிடுங்கி யெழிலாக யெரிகாலன் வேருங்கூட்டி
தட்டியேரழிஞ்சி மூலந்தானும்
சாங்கமுடன் பொன்னினாவாரைக்கூட்டி
குட்டியென்ற
மிளகுசாரணையுஞ்சேரு கூறான சமனிடையாய் களஞ்சிதூக்கே
விளக்கவுரை :
5504. தூக்கியே தலைச்சுருளி
மூலங்கூட்டி துப்புரவாம் ருதுகாலசீலைதன்னில்
ஆக்கமுடன்
தலைமைஞ்சங்கொடியுஞ்சேர்த்து வப்பனே சீலைதன்னில் வைத்துருட்டி
நோக்கமுடன்
ஐங்கோலத்தயிலத்தாட்டி நுணுக்கமுடன் பேரண்டந் தன்னிலப்பா
தீக்கமல மானதொரு
கலசந்தன்னில் திகழுடனே தீபமது ஏற்றிடாயே
விளக்கவுரை :
5505. ஏற்றியே மையதனை வாங்குவாங்கு
யெழிலான சிமிழ்தனிலே பதனம்பண்ணு
போற்றியே மனோன்மணித்தாய்
பதாம்புயத்தை பொங்கமுடன் சதாகாலம் நிமிர்த்தம்செய்து
ஆற்றியே ஐங்கோல கருவின்மையை
வப்பனே லலாடமதில் விட்டுமேதான்
கூற்றனெனும் காலனவன்
தான்நடுங்க குவலயத்தில் சாரியது வருவாய்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments