HomeUncategorizedபட்டினச் சித்தர் ஞானம் 46 - 50 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 46 – 50 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 46 – 50 of 101 பாடல்கள்

46. பேசாத ஞானப் பெருமைக் கிடப்பதுதான்
ஆசாபா சங்களில்லா தார்க்கல்லோ – சுசாமல்
தேசமெல்லாம் ஓடித் திரிகின்றாயே மனமே
ஆசாபா சங்களும் நீ யாய்.

விளக்கவுரை :

47. பாசங் களைந்து பதியி லிருந்துகொண்டு
பேசரிய காலைப் பிடித்திருக்க – நேசமுடன்
நாமிருவ ருங்கூடி நாதாந்த ஞானத்தை
தாமொருவ னாயிருக்கத் தங்கு.

விளக்கவுரை :

48. தங்கு நெடுவளையில் சகலங் களுங்கடந்து
எங்குநான் றானா யிருக்காமல் – மங்கு
கருவானாய் நெஞ்சே கரிக்கால தூதன்
வருவானே யென்ன வகை.

விளக்கவுரை :

49. என்னவகை செய்வோம் எமதூதன் வந்தக்கால்
பின்னையென ஒட்டானே பேய்நெஞ்சே – சொன்ன
படியேகேள் தூதன் பரிந்துவரு முன்னே
அடிதேடிக் கொண்டே அமர்.

விளக்கவுரை :

50. அமரும் மனம்புத்தி யாங்கார மேசித்
தமரும் பொழுது வேறானோர் – அமரும்
கோவென் றுரைத்தநமன் கொண்டுபோம் போதறிவு
வாவென்றால் நெஞ்சே வாராது.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments