HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4651 - 4655 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4651 – 4655 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4651 – 4655 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4651. தானான காலாங்கிநாதர்பாதா
தண்மையுள்ள சிசுபாலா போகநாதா
கோனான தேவேந்திரபதியைக்காண
கொற்றவனே வந்ததொரு தீரமாறா
தேனான மனோன்மணியாட்
குகந்தசீஷா தேசத்தில் சித்தர்மெச்சும் குணக்குன்றேகேள்
பானான எந்தனது பக்கல்தன்னில்
பட்சமுடன் கொலுவிருந்தார் கோடியாமே
விளக்கவுரை :
4652. கோடியாம் நவகோடி ரிஷிகளப்பா
கொற்றவர்கள் எந்தனது கொலுக்கூடத்தில்
நீடியே நவகோடி ரிஷிகளப்பா
நலமையுடன் கொலுவிருந்தார் கோடிமாண்பர்
ஆடியே எந்தனது சபையின்முன்னே
அரம்பைமுதல் மேனகையு மாடிநிற்க
தேடியே மாதரிடம்
கிட்டேநின்று தேவிகள்மேல் மோகமது கொண்டிட்டாரே
விளக்கவுரை :

[ads-post]
4653. கொண்டாரே ரிஷியாரும்
மாதுபேரில் கொற்றவனார் ரிஷியாரின் எண்ணந்தன்னை
கண்டேனே மனந்தனிலே
சந்தேகங்கள் கசடுள்ள பாவியென்று மனதிலுன்னி
தெண்டனைகள் செய்யாமல்
ரிஷியார்தன்னை சிறப்புடனே சாபமதுயான்கொடுத்து
அண்டமதில் தானேகும்
மயிலைப்போல அவனிதனில் போகவென்று வரந்தந்தேனே
விளக்கவுரை :
4654. தந்தேனே பொன்மயிலாய்
வடிவமாகி தாரணியில் சதாகால மிருக்கவென்று
இந்ததொரு தேவெந்திர
லோகம்விட்டு எழிலான வையகத்தில் ஏகவென்று
நிந்தைகொண்ட பாவியர்க்கு
வையகந்தான் நீடாழியுலகமே சதாகாலந்தான்
சொந்தமாய் வையகத்தி
லிருக்கவென்று சொன்னேனே சாபமது ரிஷிக்குத்தானே
விளக்கவுரை :
4655. தானான சாபமது பெற்றமல்லோ
தாரணியில் பொன்மயிலா யிருக்கவென்று
மானான துவாபர யுகத்திலப்பா
மகத்தான சாபமது நேர்ந்துதங்கே 
பானான ரிஷியாரை சாபம்தீர்க்க
பாருலகில் சமாதிகொண்ட சொரூபசித்து
கோனான குருசாமி
காலாங்கிநாதர் கொற்றவனார் மன்னாப்பு சொன்னார்காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments