HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5286 - 5290 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5286 – 5290 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5286 – 5290 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5286. கூட்டியே கருஞ்சோரா
செஞ்சோராதானும் குடிகெடுக்கும் குமுணாவின்கணையுங்கூட்டி
தாட்டிகமாய்ச் செங்கொட்டைப்
பூரந்தானும் சட்டமுடன் சரியெடையாய் நிறுத்திக்கொண்டு
வாட்டமுடன் பாம்பினது
விஷத்தாலாட்டி வளம்பெறவே சிமிளிதனில் பதனஞ்செய்து
ஆட்டமது வாடுதற்கு
வயணஞ்சொல்வேன் வப்பனே எந்தனது முறைமைபாரே
விளக்கவுரை :
5287. முறையான முறையதும்
என்னவென்றால் மூர்க்கராங் கருமிகட்கும் சண்டாளர்க்கும்
கறையான நேத்திரத்தில்
கண்டபோது கரம்பேசி நயம்பேசி குடிகெடுக்கும்
திறையான பாவிகட்கு
யிந்தபாகம் திகழுடனே வுள்ளங்கால் தாக்குவாய்நீ
சிறைகொண்டு மாநிலத்தில்
நோயுங்கண்டு சீரழிந்து குழிவிழுந்து போவான்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5288. போவானே திரேகமெல்லாம்
புண்ணுமாகி பொங்கமுடன் வையகத்தினாசைவிட்டு
சாவானே அறுதிங்கள் சட்டமுடன்
காலில்வந்து பணிவானானால்
நோவான பிணியதுவுந் தீருதற்கு
நுட்முடன் வெள்ளையென்ற குன்றிதானும்
தேவான தழையதுவும்
பிடுங்கிவந்து தேற்றமுடன் பாதாளமூலிசேரே
விளக்கவுரை :
5289. மூலியென்ற சிறுகீரை வேருஞ்சேரு முனையாகச் சரியெடையாய் யெடுத்துக்கொண்டு
நீலியென்ற மூலியப்பா
சரிநேரொக்க நீமகனே நினைவாகப் பாண்டமிட்டு
சாலியனார் பாண்டமதிற்
ஜலமேவிட்டு சாங்கமுடன் கியாழமது செய்துகொண்டு
நாலிலொரு கியாழமது
காய்ந்துதானால் நலமான கியாழமதை யிறக்கிடாயே
விளக்கவுரை :
5290. இறக்கியே கியாழமது
நாளொன்றுக்கு யென்மகனே நீநினைவாய் நாழியாக
உறக்கமது வாராமல் அந்திசந்தி
யுத்தமனே இருவேளைக் கொள்வாரானால்
திறமுடைய கியாழமது வேகத்தாலே
தீருமே குழுவிழுந்த புண்ணுமாறும்
நிறமான முன்சொன்ன மூலியப்பா
நித்தமுமே மேலரைத்துப் பூசிடாயே 
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments