HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4901 - 4905 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4901 – 4905 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4901 – 4905 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4901. கூறவென்றால் சாரனைகள்
என்னசொல்வேன் கொப்பெனவே வசிஷ்டமகாரிஷியார்தாமும்
மாறலுடன் குளிகைக்கு
வுறுதிசொல்லி மகத்தான சாரனைகள் மிகவுஞ்செய்து
ஆறவே எந்தனுக்கு வதிதங்கூறி
வப்பனே குளிகையிட மார்க்கங்கூறி 
சேறவே மகமேரு தன்னிலப்பா
தேற்றமுடன் செல்கவென்று வரந்தந்தாரே
விளக்கவுரை :
4902. தந்தாரே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
தெந்தமுடன் அடியேனுங்
குளிகைகொண்டு துப்புரவாய் மேருகிரி தன்னிற் சென்றேன்
அந்தமுடன் பதிமூன்றாம்
வரையிற்சென்று அவ்வரையில் விநாயகரைக் காணவென்று
விந்தையுடன் அடியேனும்
மனதுவந்து வஇருப்பமுடன் குளிகைகொண்டு சென்றேன்தானே
விளக்கவுரை :

[ads-post]
4903. தானான குளிகைகொண்டு காலாங்கிநாதர்
தண்மையுடன் குருதனையே நினைந்து
கொண்டு
தேனான பதிமூன்றாம் வரையிற்
சென்றேன் தோற்றமுடன் விநாயகரின் சமாதிகாண
கோனான தும்பிக்கை யுடைய
மாண்பன் கொற்றவனாங் கணபதியாமென்ற சித்து
மானான மகதேவரென்னுஞ்சித்து
மகத்தான சமாதிபதி கண்டிட்டேனே
விளக்கவுரை :
4904. கண்டேனே சமாதியிட
பக்கந்தன்னில் கருவான சித்துமுனி கோடாகோடி
விண்டதொரு நாதாக்கள்
கூட்டந்தன்னை விருப்பமுடன் யான்கண்டு மனதுவந்து
தெண்டமுடன் அடியேனும்
முடிகள்சாய்ந்து தேற்றமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று
கொண்டனைத்து எந்தனுக்கு
விதிகள்கூறி குருவான விநாயகரைக் காண்பிப்பீரே
விளக்கவுரை :
4905. காண்பிக்கவேண்டுமென்று
அடியேன்தானும் கனமான சித்துகளை வினவும்போது
வீண்பாலா வுந்தனையும்
சபிப்பேனென்று வினவுடனே சித்துமுனி கூறும்போது
ஆண்மையுள்ள ரிஷிதேவர்
அனைவோருக்கும் வப்பனே ஆதரிக்கவென்றுசொல்லி
கேண்மையுடன் அடியேனுங்
காலாங்கிதன்னை கீழ்மையுடன் அடியேனும்
நினைந்திட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments