HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4666 - 4670 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4666 – 4670 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4666 – 4670 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4666. விடையென்று சொல்லுகையில்
போகர்தானும் விருப்பமுடன் சமாதியிடம் மூடியேதான்
தடையறவே தசவாண்டு
யங்கிருந்தார் சட்டமுடன் சீனபதி தேசந்தன்னில்
படைவீரர் காவலுடன்
சமாதிபக்கம் பட்சமுடன் தாமிருந்தார் போகர்தானும்
சடைபோன்ற சீஷவர்க்க
மனேகம்பேர்கள் சாங்கமுடன் கொலுவிருந்தார் சமாதிகாணே
விளக்கவுரை :
4667. காணவே போகரிஷிமுனிவர்தானும்
கனமுடனே சீனபதிப்பெண்களோடு
பூணவே கல்விமுகம் சிலதுகாலம்
பொங்கமுடன் தாமிருந்தார் லீலைதன்னில்
வேணதொரு வுலகாதி
வித்தையெல்லாம் விருப்பமுடன் மாதர்களுக்குபதேசித்து
நீணவே கவனமென்ற குளிகைதன்னை
நீதியுடன் தாம்பூண்டார் போகர்பாரே
விளக்கவுரை :

[ads-post]
4668. பாரேதான்
போகரிஷிமுனிவர்தானும் பராபரியாள் அம்பாளின் கிருபையாலே
நேரேதான் குளிகைமுகம்
பூண்டுகொண்டு நேர்மையுடன் தேசபதி சுத்தியேதான்
ஊரேதான் கிக்கிந்தா
மலையைத்தேடி வுத்தமனே திருவேல ரிஷியார்முன்னே
சேரேதான் மலைமீதில்
உச்சிதன்னில் சிறப்புடனே தானிறங்கி நின்றிட்டாரே
விளக்கவுரை :
4669. நின்றதொரு போகர்முனி
தன்னைப்பார்த்து நிட்களங்கமானதொரு சீஷவர்க்கம்
குன்றின்மேல் தாமிருந்தார்
யுகாந்தபேர்கள் கொற்றவனே வரைகோடி திகழ்கோடிதானும்
சென்றுமே காலாங்கிநாதசீஷர்
சிறப்புடனே போகர்முனி பதாம்புயத்தை
நன்றுடனே வஞ்சலிகள்
மிகவுங்கூறி நாதாந்த போகர்தனைக் கண்டார்தானே
விளக்கவுரை :
4670. தானான சீஷவர்க்கம்
கண்டுமேதான் தகமையுள்ள திருவேல ரிஷியாருக்கு
கோனான சொரூபமென்ற நாதருக்கு
கொற்றடிமை கொண்டதொரு சீடரெல்லாம்
தேனான வவர்பாதம் கிட்டியல்லோ
தோற்றமுடன் சென்றார்கள் கோடிமாண்பர்
மானான ரிஷியாரின்
பக்கல்சென்று மகத்தான குருவென்று தொழுதிட்டாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments