HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5061 - 5065 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5061 – 5065 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5061 – 5065 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5061. தானான வித்தையிது சூட்சம்
சூட்சம் தாரணியில் யாரேனும் காண்பதுண்டோ
கோனான காலாங்கி நாதரப்பா
கொற்றவனார் எந்தனுக்கு உபதேசித்த
தேனான வித்தையிது தேசிவித்தை
ஜெகதலத்தில் கோடிபேர் மயங்குவார்கள்
பானான பராபரியாள்
கடாட்சத்தாலே பாலகனே யுந்தனக்கு யோதினேனே
விளக்கவுரை :
5062. ஓதினேன் ஜாலமென்ற வினோதஜாலம்
வுத்தமனே வையகத்தோர் பிழைக்கவென்று
நீதியுடன் உந்தமக்கு
சொன்னேன்யானும் நிட்களங்க மாகவல்லோ வுரைத்தேனப்பா
பாதிமதி தானணிந்த தம்பிரானே
பாருலகில் சித்தனைப்போ லிருந்துகொண்டு
ஜோதிமயங் காணுதற்கு
சூட்சாசூட்சம் தொல்லுலகில் காண்பதற்கு வழிகொள்வாயே
விளக்கவுரை :

[ads-post]
5063. கொள்ளவென்றால் குருபதத்தின்
கொள்கைவேண்டும் கோளாறுதானகற்றி நடக்க
வேண்டும்
எள்ளளவும் பொய்சூது
கபடுதந்திரம் யென்மகனே மனந்தனிலே நண்ணலொப்ப
புள்ளிமயிலேறிவரும்
புனிதவானை புகழுடனே எந்நாளும் நினைக்கவேண்டும்
விள்ளவே யவருமக்கு
வுபதேசிப்பார் வித்தகனே எல்லோரும் போற்றுவாரே
விளக்கவுரை :
5064. போற்றுவாரின்னமொரு கருமானங்கேள் பொங்கமுடன் உந்தமக்குக் கூறுவேன்யான்
ஆற்றலுடன் காலாங்கி நாதரோடு
வன்புடனே வனஞ்சுத்தி வருகும்போது
காற்றுடனே வனாந்திரங்கள்
சுற்றும்போது கண்மணியே எந்தனுக்குக் களையுண்டாச்சு
நீற்றலுடன் காலாங்கி
யென்னைப்பார்த்து நீட்சியுடன் களைபோக நினைத்திட்டாரே
விளக்கவுரை :
5065. நினைத்துமே
வரிசிதனைக்கொண்டுவந்து நீதியுடன் காலாங்கிநாதர்தாமும்
புனைப்புடனே
சீலைதனிலரிசிகொட்டி புகழுடனே தோளாந்திரமாகவல்லோ
சினைப்பதற்கு வரிசிக்கு
நாலுகொண்ட சிறப்பான இடமதுவும் அதிகம்விட்டு
பனைப்புடனே தான்முடிந்து
வாற்றோரந்தான் பட்சமுடன் மணல்தனிலே பதிந்திட்டாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments