HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5246 - 5250 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5246 – 5250 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5246 – 5250 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5246. கெட்டாரே யிப்படியே
வையகத்தோர் கேடழிந்து சீரழிந்து சைவங்கெட்டு
இட்டபடி பிறவியென்ற சைவமாக
எழிலுடனே மாண்பரெல்லாம் நம்புறார்கள்
தொட்டதொரு பொருளெல்லாம்
சைவமில்லை தோராமல் மாண்பரெல்லாம் புலாலே
தின்போர்
சட்டமுடன் எந்தன்குரு
காலாங்கிநாதர் சாங்கமுடன் எந்தனுக்கு வுரைத்தநூலே
விளக்கவுரை :
5247. நூலான நூலுக்குள்
அதிதங்காணும் நுட்பமென்ற பொருளெல்லாம் இதிலேதோயும்
காலான காலாங்கி சொன்னவாக்கு
காசினியில் பொய்யாது மெய்யேயாகும்
மாலான மாண்பரெல்லாம்
சிற்றின்பத்தில் மதிகெட்டு தேவதா மங்கையோடு
கோலான லீலையது மிகவுமாடி
குவலயத்தில் யெல்லில்தனை விரும்பினாரே
விளக்கவுரை :

[ads-post]
5248. விரும்பியே கலவிதனி
லிருவரெச்சை மெய்யுடலாவிபொருள் எல்லாந்தந்து
சுரும்பியன கைப்பொருள்கள்
யாவுந்தந்து சுந்தரமே மோட்சமிது யோனியென்று
கரும்புடனே
மூத்திரக்குழியையப்பா கைலாசமேருகிரி யென்றுநம்பி 
துரும்பாகப் போனவர்கள்
கோடாகோடி தூங்கியே மாண்டவர்கள்கோடியாமே
விளக்கவுரை :
5249. கோடியாம் ரிஷிதேவர் முதலாயுள்ளோர் குவலயத்தில் மாண்டவர்கள் கணக்கோயில்லை
தேடியே மாயவலை சிக்கியல்லோ
தேசத்தில் கெட்டவர்கள் அதிகமாண்பர்
நீடியே வையகத்தி
லிருந்தொரில்லை நிட்சயமாய் காலங்கி சொன்னநீதி
வாடியே போகரிஷி யடியேனப்பா
வன்புடனே தாமுரைத்த நீதிதாமே
விளக்கவுரை :
5250. தானான நீதியது
யாருக்கென்றால் தாரணியில் சீனபதியுலகத்தோர்கள்
மானான வாக்கியத்தை மெய்யென்றெண்ணி
மகவதிலும் பதின்மடங்கு வதிகமாக
கோனான காலாங்கிநாதர்சொல்லை
கொப்பெனவே மெய்யென்று நம்பியல்லோ
வேனான வொழுக்கம்
ஆசாரத்தோடும் மேதினியில் நடப்பதுவும் உண்மையாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments