HomeUncategorizedThirukural 1235 of 1330 - திருக்குறள் 1235 of 1330

Thirukural 1235 of 1330 – திருக்குறள் 1235 of 1330

Thirukural
1235 of 1330 –
திருக்குறள் 1235 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : உறுப்புநலனழிதல்.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

Translation:
These wasted arms, the bracelet with their
wonted beauty gone,
The cruelty declare of that most cruel one.

Explanation:
The (loosened) bracelets, and the shoulders
from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.
கலைஞர் உரை:
வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

[ads-post]

மு.வ உரை:
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:
வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.
மணக்குடவர் உரை:
கொடியாரது கொடுமையைச் சொல்லாநின்றன வளையோடே கூடப் பழையவாகிய அழகினை யிழந்த தோள்களும். இது தலைமகளாற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்துத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) கொடியார் கொடுமை உரைக்கும் – கவவுக்கை நெகிழினும் ஆற்றாதாட்கு இக்கால நீட்டத்து என்னாம் என்று நினையாத கொடியாரது கொடுமையைத் தாமே சொல்லாநின்றன; தொடியோடு தொல் கவின் வாடியதோள் – வளைகளும் கழன்று பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள், இனி அதனை யாம் மறைக்குமாறு என்னை? (‘உரைக்கும்‘ என்பது அப்பொருண்மை தோன்ற நின்ற குறிப்புச் சொல். ஒடு – வேறு வினைக்கண் வந்தது. ‘அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால், அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ‘? என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments