HomeUncategorizedThirukural 1157 of 1330 - திருக்குறள் 1157 of 1330

Thirukural 1157 of 1330 – திருக்குறள் 1157 of 1330

Thirukural
1157 of 1330 –
திருக்குறள் 1157 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பிரிவாற்றாமை.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
Translation:
The bracelet slipping from my wrist
announced before
Departure of the Prince that rules the
ocean shore.
Explanation:
Do not the rings that begin to slide down
my fingers forebode the separation of my lord ?.
கலைஞர் உரை:
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.

[ads-post]
மு. உரை:
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.
மணக்குடவர் உரை:
இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) துறைவன் துறந்தமைதுறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல்அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின்துறந்தமைஎன்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், ‘இறவாநின்றஎன்றும் கூறினாள். ‘அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யைய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்எனப் புலந்து கூறியவாறு.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments