HomeUncategorizedThirukural 1189 of 1330 - திருக்குறள் 1189 of 1330

Thirukural 1189 of 1330 – திருக்குறள் 1189 of 1330

Thirukural
1189 of 1330 –
திருக்குறள் 1189 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பசப்புறுபருவரல்.
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
Translation:
Well! let my frame, as now, be sicklied
o’er with pain,
If he who won my heart’s consent, in good
estate remain!.
Explanation:
If he is clear of guilt who has conciliated
me (to his departure) let my body suffer its due and turn sallow.
கலைஞர் உரை:
பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!.

[ads-post]
மு. உரை:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.
மணக்குடவர் உரை:
என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின். இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின்இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்கஎன் மேனி பட்டதுபடப் பசப்பதாக. (நன்னிலையராதல்நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். ‘பட்டாங்காகஎன ஆக்கம் விரித்து உரைக்க. ‘முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்‘? என்பதுபட நின்றமையின், ‘மன்ஒழியிசைக்கண் வந்தது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments