HomeUncategorizedThirukural 907 of 1330 - திருக்குறள் 907 of 1330

Thirukural 907 of 1330 – திருக்குறள் 907 of 1330

Thirukural
907 of 1330 –
திருக்குறள் 907 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பெண்வழிச்சேறல்.
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
Translation:
The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman’s law
who dwells.
Explanation:
Even shame faced womanhood is more to be
esteemed than the shameless manhood that performs the behests of a wife.
கலைஞர் உரை:
ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.

[ads-post]
மு. உரை:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
மணக்குடவர் உரை:
பெண்டிர் ஏவின தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே தலைமை உடைத்தாம். இது பிறரால் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின்நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல்தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்துநாணி்னையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து. (‘நாணுடைப் பெண்என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல்ஆகுபெயர். இறுதிக்கண்பெண்என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துக்கோடற் சிறப்புத் தோன்றப்பெண்ணேஎனப் பிரித்தார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments