குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிசெயல்வகை.
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
Translation:
Who labours for his race with unremitting
pain,
pain,
Without a thought spontaneously, his end
will gain.
will gain.
Explanation:
Those who are prompt in their efforts (to
better their family) need no deliberation, such efforts will of themselves
succeed.
better their family) need no deliberation, such efforts will of themselves
succeed.
கலைஞர் உரை:
தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.
[ads-post]
மு.வ உரை:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
மணக்குடவர் உரை:
தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச்செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவுபெறும். கருதினவளவிலே அவரது நல்வினைதானே முடிக்கும்: இவர் தம்கண் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு.
பரிமேலழகர் உரை:
தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு – தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் – அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழவேண்டாமல் தானே முடிவெய்தும். (குடி ஆகுபெயர். தெய்வம் முந்துறுதலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.)




