HomeUncategorizedThirukural 764 of 1330 - திருக்குறள் 764 of 1330

Thirukural 764 of 1330 – திருக்குறள் 764 of 1330

Thirukural
764 of 1330 –
திருக்குறள் 764 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : படையில். அதிகாரம் : படைமாட்சி.
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
Translation:
That is a host, by no defeats, by no
desertions shamed,
For old hereditary courage famed.
Explanation:
That indeed is an army which has stood firm
of old without suffering destruction or deserting (to the enemy).
கலைஞர் உரை:
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.

[ads-post]
மு. உரை:
(போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
போரில் தோற்காமலும், பகைவரின் சதிக்குத் துணை போகாமலும், தொன்று தொட்டு வரும் வீரத்தை உடையதே படை.
மணக்குடவர் உரை:
கெடுதலின்றிக் கீழறுக்கப்படாததாகிக் குலத்தின் வழிவந்த அஞ்சாமையையுடையதே படையாவது. வழிவருதல்வீரன்மகன் வீரனாகுதல். இது படையினது நன்மைகூறிற்று.
பரிமேலழகர் உரை:
அழிவு இன்றிபோரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகிபகைவரால் கீழறுக்கப்படாததாய்: வழிவந்த வன்கணதுவே படைதொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே அரசனுக்குப் படையாவது. (அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை போகாமையான் அரசர்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன. வழி வந்த வன்கண்மை, ‘கல்நின்றான் எந்தை கணவன் களப்பாட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான் என் ஏறு‘. (பு.வெ.மா.வாகை,22) என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய் விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments