HomeUncategorizedThirukural 684 of 1330 - திருக்குறள் 684 of 1330

Thirukural 684 of 1330 – திருக்குறள் 684 of 1330

Thirukural
684 of 1330 –
திருக்குறள் 684 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
Translation:
Sense, goodly grace, and knowledge
exquisite.
Who hath these three for envoy’s task is
fit.
Explanation:
He may go on a mission (to foreign rulers)
who has combined in him all these three. viz., (natural) sense, an attractive
bearing and well-tried learning.
கலைஞர் உரை:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

[ads-post]
மு. உரை:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.
மணக்குடவர் உரை:
அறிவும், வடிவும், தெரிந்த
கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க
. அறிவுஇயற்கையறிவு.
பரிமேலழகர் உரை:
அறிவுஇயற்கையாகிய
அறிவும்
; உருகண்டார்
விரும்பும் தோற்றப்பொலிவும்
;
ஆராய்ந்த கல்விபலரோடு
பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என
; இம்மூன்றன் செறிவு உடையான்நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது
கூட்டத்தை உடையான்
; வினைக்குச்
செல்க
வேற்று
வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க
. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், ‘செறிவுடையான்என்றார். இவற்றான் நன்கு
மதிப்புடையனாகவே
, வினை
இனிது முடியும் என்பது கருத்து
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments