HomeUncategorizedThirukural 1229 of 1330 - திருக்குறள் 1229 of 1330

Thirukural 1229 of 1330 – திருக்குறள் 1229 of 1330

Thirukural
1229 of 1330 –
திருக்குறள் 1229 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பொழுதுகண்டிரங்கல்.
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
Translation:
If evening’s shades, that darken all my
soul, extend;
From this afflicted town will would of
grief ascend.
Explanation:
When night comes on confusing (everyone’s)
mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.
கலைஞர் உரை:
என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது.

[ads-post]
மு. உரை:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.
சாலமன் பாப்பையா உரை:
இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.
மணக்குடவர் உரை:
என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதிமானம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) (இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன்) மதி மருண்டு மாலை படர்தரும் போழ்துஇனிக் கண்டாரும் மதி மருளும் வகை மாலை வரும்பொழுது; பதி மருண்டு பைதல் உழக்கும்இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும். (‘மதி மருளஎன்பதுமதி மருண்டுஎனத் திரிந்து நின்றது. கூற்றமாகக் கருதிக் கூறினாளாகலின்மாலை படர்தரும் போழ்துஎன்றாள். ‘யான் இறந்து படுவல்என்பதாம். ‘மாலை மயங்கி வரும் போழ்து என் மதி நிலை கலங்கி நோயும் உழக்கும்என்று உரைப்பாரும் உளர்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments