HomeUncategorizedThirukural 618 of 1330 - திருக்குறள் 618 of 1330

Thirukural 618 of 1330 – திருக்குறள் 618 of 1330

Thirukural
618 of 1330 –
திருக்குறள் 618 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : ஆள்வினையுடைமை.
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
Translation:
‘Tis no reproach unpropitious fate should
ban;
But not to do man’s work is foul disgrace
to man!.
Explanation:
Adverse fate is no disgrace to any one; to
be without exertion and without knowing what should be known, is disgrace.
கலைஞர் உரை:
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

[ads-post]
மு. உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.
மணக்குடவர் உரை:
யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது. அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது. அறிவுகாரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ என்றார்க்கு, இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
பொறி இன்மை யார்க்கும் பழியன்றுபயனைத்தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழிஅறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவனவலி முதலாயின. ‘தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை‘, என்பாரை நோக்கி, ‘உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பதுஎன்றார். அதனால் விடாதுமுயல்க என்பது குறிப்பெச்சம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments