HomeUncategorizedThirukural 936 of 1330 - திருக்குறள் 936 of 1330

Thirukural 936 of 1330 – திருக்குறள் 936 of 1330

Thirukural
936 of 1330 –
திருக்குறள் 936 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : சூது.
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
Translation:
Gambling’s Misfortune’s other name: o’er
whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore
bewail.
Explanation:
Those who are swallowed by the goddess
called “gambling” will never have their hunger satisfied, but suffer
the pangs of hell in the next world.
கலைஞர் உரை:
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.

[ads-post]
மு. உரை:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.
மணக்குடவர் உரை:
தமக்கு உள்ளதாகிய இந்திரியங்களும் மனமும் இன்புற்று நிறையப்பெறார்; அதுவேயன்றி அல்லற்படுவதும் செய்வர்; சூதாகிய மூதேவியாலே மறைக்கப்பட்டார். மறைத்தல்நற்குணங்களைத் தோன்றாமல் மறைத்தல்.
பரிமேலழகர் உரை:
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார்தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர்இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின்சூது என்னும் முகடிஎன்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டுஅகடு ஆரார்என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டுஅல்லல் உழப்பர்என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments