HomeUncategorizedThirukural 254 of 1330 - திருக்குறள் 254 of 1330

Thirukural 254 of 1330 – திருக்குறள் 254 of 1330

Thirukural
254 of 1330 –
திருக்குறள் 254 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
புலான்மறுத்தல்.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
Translation:
‘What’s grace, or lack of grace’? ‘To kill’
is this, that ‘not to kill’;
To eat dead flesh can never worthy end
fulfil.
Explanation:
If it be asked what is kindness and what
its opposite, the answer would be preservation and destruction of life; and therefore
it is not right to feed on the flesh (obtained by taking away life).
கலைஞர் உரை:
கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது.

[ads-post]
மு. உரை:
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
சாலமன் பாப்பையா உரை:
இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே.
மணக்குடவர் உரை:
அருளல்லது யாதெனின், கொல்லாமையைச் சிதைத்தல்; பொருளல்லது யாதெனின் அவ்வூனைத் தின்றல். இஃது அதனை யுண்டதால் அருள் கெடுதலேயன்றிப் பெறுவதொரு பயனுமில்லை என்றது.
பரிமேலழகர் உரை:
அருள் யாது எனின் கொல்லாமைஅருள் யாது எனின், கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல்அருள் அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள் அல்லதுஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம். (உபசாரவழக்கால்கொல்லாமை, கோறல்ஆகிய காரியங்களைஅருள் அல்லதுஎனக் காரணங்கள் ஆக்கியும்ஊன் தின்கைஆகிய காரணத்தைப்பாவம்எனக் காரிய மாக்கியும் கூறினார். அருளல்லதுகொடுமை. சிறப்புப்பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது எனப்பட்டது. ‘கோறல்என முன் நின்றமையின்அவ்வூன்என்றார். இனி இதனை இவ்வாறன்றிஅருளல்லதுஎன்பதனை ஒன்றாக்கிக், ‘கொல்லாமை கோறல்என்பதற்குக்கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்என்று உரைப்பாரும் உளர்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments