குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைத்திறந்தெரிதல்.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
Translation:
Know thou the way, then do thy part,
thyself defend;
thyself defend;
Thus shall the pride of those that hate
thee have an end.
thee have an end.
Explanation:
The joy of one’s foes will be destroyed if
one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
கலைஞர் உரை:
வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.
[ads-post]
மு.வ உரை:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன் ரகசியங்களையும் நாம் காத்துக் கொண்டால், பகைவர் தங்கள் மனத்துள் நம்மை எதிர்க்க எண்ணிய செருக்கு அழியும்.
மணக்குடவர் உரை:
வினைசெய்யும் வகையை யறிந்து, தன்னைப் பெருக்கித் தான் தன்னைக் காக்கப் பகைவர்மாட்டு உண்டான பெருமிதம் கெடும். இது பகைவரைக் கொல்லுந் திறங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
வகை அறிந்து தற் செய்து தற் காப்ப – தான் வினை செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத் தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் – தன் பகைவர் மாட்டு உளதாய களிப்புக் கெடும். (வகை – வலியனாய்த் தான் எதிரே பொருமாறும், மெலியனாய் அளவில் போர் விலக்குமாறும் முதலாயின. பெருக்கல் – பொருள் படைகளாற் பெருகச் செய்தல். களிப்பு – ‘இவற்றான் வேறும்‘ என்று எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண் செய்வன கூறப்பட்டன.)




