குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
இல்வாழ்க்கை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
இல்வாழ்க்கை.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
Translation:
In
nature’s way who spends his calm domestic days,
nature’s way who spends his calm domestic days,
‘Mid
all that strive for virtue’s crown hath foremost place.
all that strive for virtue’s crown hath foremost place.
Explanation:
Among
all those who labour (for future happiness) he is greatest who lives well in
the household state.
all those who labour (for future happiness) he is greatest who lives well in
the household state.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
[ads-post]
மு.வ உரை:
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்– வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
மணக்குடவர் உரை:
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்– பொருட்கு முயறல்.
பரிமேலழகர் உரை:
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் – இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை – புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், ‘முயல்வார்‘ என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், ‘தலை‘ எனவும் கூறினார்.).




