HomeUncategorizedThirukural 1325 of 1330 - திருக்குறள் 1325 of 1330

Thirukural 1325 of 1330 – திருக்குறள் 1325 of 1330

Thirukural
1325 of 1330 –
திருக்குறள் 1325 of 1330

thirukural

குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : ஊடலுவகை.
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Translation:
Though free from fault, from loved one’s
tender arms
To be estranged a while hath its own
special charms.

Explanation:
Though free from defects, men feel pleased
when they cannot embrace the delicate shoulders of those whom they love.
கலைஞர் உரை:
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

[ads-post]

மு. உரை:
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

மணக்குடவர் உரை:
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

பரிமேலழகர் உரை:
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின்ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்துஅவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், ‘தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்துஎன்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், ‘கூறற்கரிதுஎன்பான், ‘அப்பெற்றியதொன்றுஎன்றான். ‘தவறின்றிஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்றுஎன்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments