குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
Translation:
The king, who knows to live with worthy men
allied,
allied,
Has nought to fear from any foeman’s pride.
Explanation:
There will be nothing left for enemies to
do, against him who has the power of acting (so as to secure) the fellowship of
worthy men.
do, against him who has the power of acting (so as to secure) the fellowship of
worthy men.
கலைஞர் உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
மணக்குடவர் உரை:
தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.
பரிமேலழகர் உரை:
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை – தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் – பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை. (தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், ‘செற்றார் செயக்கிடந்தது இல்‘ என்றார்.)




