HomeUncategorizedThirukural 893 of 1330 - திருக்குறள் 893 of 1330

Thirukural 893 of 1330 – திருக்குறள் 893 of 1330

Thirukural
893 of 1330 –
திருக்குறள் 893 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை.
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
Translation:
Who ruin covet let them shut their ears,
and do despite
To those who, where they list to ruin have
the might.
Explanation:
If a person desires ruin, let him not
listen to the righteous dictates of law, but commit crimes against those who
are able to slay (other sovereigns).
கலைஞர் உரை:
ஒருவன், தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள விரும்பினால் பகையை நினைத்த மாத்திரத்தில் அழிக்கக் கூடிய ஆற்றலுடையவர்களை யார் பேச்சையும் கேட்காமலே இழித்துப் பேசலாம்.

[ads-post]
மு. உரை:
அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தான் அழிய எண்ணினால் பிறரை அழிப்பதைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்களிடம், நீதிநூல்கள் சொல்லும் வழிகளையும் எண்ணிப் பாராமல் பிழை செய்க.
மணக்குடவர் உரை:
பெரியவர்களைப் போற்றாது ஒழுகுவனாயின் அவ்வொழுக்கம் அவராலே எல்லாரானும் இகழப்படும் நீங்காத துன்பத்தைத் தரும். இது முனிவரைப் போற்றா தொழியின் அது குற்றம் பயக்கு மென்றது.
பரிமேலழகர் உரை:
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்குவேற்று வேந்தரைக் கோறல் வேண்டிய வழி அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர்மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாதுசெய்கதான் கெடுதல் வேண்டினானாயின், ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க. (அப்பெரியாரைக்காலனும் காலம் பார்க்கும் பாராதுவேல் ஈண்டு தானை விழுமியோர் தொலையவேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்‘ (புறநா.41) என்றார் பிறரும்.நீதி நூல்செய்யலாகாதுஎன்று கூறலின், ‘கேளாதுஎன்றார்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments