குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : ஊழியல். அதிகாரம் : ஊழ்.
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
Translation:
The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills
would spare.
would spare.
Explanation:
The destitute will renounce desire (and
become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which
they are liable, and they pass away.
become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which
they are liable, and they pass away.
கலைஞர் உரை:
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.
[ads-post]
மு.வ உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.
மணக்குடவர் உரை:
நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது.
பரிமேலழகர் உரை:
துப்புரவு இல்லார் துறப்பார் – வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் – ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். (‘துறப்பார்‘ என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், ‘மன்‘ ஒழியிசைக்கண் வந்தது.).




