Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2531 - 2535 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2531 – 2535 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2531 – 2535 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2531. அணி நிலா வீசும் மாலை அரங்கு புல் எனப் போகித்
துணி நிலா வீசும் மாலைப் பிறை நுதல் தோழி சேர்ந்து
மணி நிலா வீசும் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
பணி நிலா வீசும் பைம் பொன் கொடி மணி மலர்ந்தது ஒத்தார்

விளக்கவுரை :

2532. வள் உகிர் வரித்த சாந்தின் வன முலை கோக்கினாரை
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கண் கரிந்து பொங்கக்
கள் உயிர் உண்ணும் மாலைக் கதுப்பு ஒரு கையின் ஏந்தி
நள் இருள் விளக்கு இட்ட அன்ன நங்கைமார் மல்கினாரே

விளக்கவுரை :

[ads-post]

2533. மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்பு போல் மறைந்து வண்ணப்
பட்டு ஒளித்து ஒழிய அல்குல் பசுங் கதிர்க் கலாபம் தோன்றக்
குட்ட நீர்க் குவளைக் கண்கள் விருந்து உண விரும்பி நின்றார்
அட்டும் தேன் அணிந்த மாலைப் பவளக் கொம்பு அணிந்தது ஒத்தார்

விளக்கவுரை :

2534. பெரும் பொருள் நீதிச் செங்கோல் பெருமகன் ஆக்கம் போலப்
பரந்து இடம் இன்றி மேலால் படா முலை குவிந்த கீழால்
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும்
மருங்கு நொந்து ஒழிய வீதி மடந்தையர் இடம் கொண்டாரே

விளக்கவுரை :

2535. செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்து நீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகம் ஆய எல்லாம்
நல் கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய
ஒல்கிப் போய் மாடம் சேர்ந்தார் ஒரு தடம் குடங்கைக் கண்ணார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments