Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 2546 - 2550 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2546 – 2550 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 2546 – 2550 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

2546. பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும்
கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று எனக் கரைந்து முந்நீர்
மண் பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னாப்
புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே

விளக்கவுரை :

2547. சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார்
தண் என் சந்தன நீர் ஆர்ந்து தேன் துளும்பும்
வண்ணப் பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சிக்
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார்

விளக்கவுரை :

[ads-post]

2548. முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார்
ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கம் காண்மின் என்பார்
சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார்

விளக்கவுரை :

2549. தேசிக முடியும் திருந்து பட்டு உடையும்
பாசம் ஆக நின்று பல் மலர்க் கழுநீர்
மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழக்
காசு இல் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பார்

விளக்கவுரை :

2550. வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றைக்
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார்
ஒண்தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார்
பெண்டிராய்ப் பிறந்தார் பெரியர் போத என்பார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments