சீவக சிந்தாமணி 2526 – 2530 of 3145 பாடல்கள்
2526. கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
இழை முலைத் தடத்தினாள் தன் கணவனைக் காண ஏகிக்
கழும் ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்த அன்ன
குழும் ஒலி அரவம் ஈண்டிக் கொடி நகர் பொலிந்தது அன்றே
விளக்கவுரை :
2527. ஒள் இலைச் சூலம் தெண்ணீர் உலா முகில் கிழிக்கும் மாடக்
கொள் கொடிக் குழாத்தினாலும் கொழு நறும் புகையினாலும்
தௌளுறு சுண்ணத்தாலும் தேன் மலர்த் துகளினாலும்
புள் இனம் பொழுது காணா புலம்பிக் கூடு அடைந்த அன்றே
விளக்கவுரை :
[ads-post]
2528. பைந்தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு
சிந்தின தழல் என்று அஞ்சிச் சிறை அன்னம் நிலத்தைச் சேரா
இந்திர கோபம் ஆம் என்று இள மயில் குனிந்து குத்திச்
சிந்தையில் தேம்பத் தாமே திருமணி நக்க அன்றே
விளக்கவுரை :
2529. வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்பப்
பிள்ளைமை காதல் கூரப் பிறழந்து பொன் தோடு வீழத்
துள்ளுபு செலீஇய தோற்றம் தொடு கழல் காமன் காமத்து
உள் உயிர் அறியப் பெண்ணாய்ப் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார்
விளக்கவுரை :
2530. தன்நெறி வளரக் காமன் தான் முலை இரண்டும் ஆகி
முன்னரே வளர்கின்றால் போல் முகிழ் முலை முத்தம் ஏந்திப்
பொன் எறி மணியின் பொங்கிக் குழல் புறம் புடைப்ப ஓடிப்
பின் நிறீஇ வைத்த போலப் பெதும்பையர் விதும்பி நின்றார்
விளக்கவுரை :




