அகத்தியர் பன்னிருகாண்டம் 196 – 200 of 12000 பாடல்கள்
196. என்னவே பற்பமது குன்றியுண்ணு
யெழிலான தேகமது கற்றூணாகும்
சொன்னபடி தப்பாமல் வனுபானத்தில்
சுந்தரனே மண்டலந்தான் கொண்டாயானால்
நன்னயமாய் தேகமது யிறுகும்பாரு
நலமான ரோகமெல்லா மகன் றுபோகும்
வின்னமில்லை ரோகமது பிணிகள்போகும்
விருப்பமுடன் மண்டலந்தான் கொண்டுபாரே.
விளக்கவுரை :
197. கொள்ளவே காயாதி கற்பமாச்சு
கோடிவரை யிருப்பதற்கு யிடமுமுண்டு
விள்ளவே பத்தியமு மொன்றுமில்லை
விருப்பமுடன் யாதெதுங் கொள்ளலாகும்
எள்ளளவும் பிசகதுவும் நேராதப்பா
யென்மகனே புலத்தியனே செப்பக்கேளும்
மெள்ளவே வாசியது கீழ்நோக்காகும்
மேன்மையுடன் சின்னமயத்தி லிருக்கலாமே.
விளக்கவுரை :
198. இருக்கலாங் கோடிவரை யுகாந்தகாலம்
எழிலான பூரணத்தி லிருந்துகொண்டு
பொருக்கவே முன்சொன்ன குருவைத்தானும்
பொங்கமுடன் வேதையுஞ் சொல்வேன்பாரு
வருக்கமுடன் வெள்ளியது கழஞ்சியேழு
வண்மையுள்ள செம்பதுங் களஞ்சிமூன்று
வருக்கியே குருவொன்று களஞ்சியாக
உத்தமனே தான்கொடுத்து யெடுத்திடாயே.
விளக்கவுரை :
199. எடுத்துமே மூசைதனை உடைத்துப்பாரு
எழிலான வெள்ளியது களங்குபோலாம்
தொடுத்ததொரு களங்குதனை எடுத்துமைந்தா
துப்புரவாய் ஓட்டிலிட்டு ஊதிப்போடு
கொடுத்ததொரு செம்பதுவும் யேகிப்போகும்
கெடியான வெள்ளியது மாற்றுகாணும்
விடுத்துமே வெள்ளியது பசுமையாகி
விருப்பமுடன் மாற்றதுவு மெட்டதாமே.
விளக்கவுரை :
200. எட்டான வெள்ளியது யெடுத்துமைந்தா
எழிலான மதிதனிலே நூற்றுக்கொன்று
திட்டமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு
திறமான வேதைமுகம் பரிசைவேதை
வட்டமுடன் சிவயோகிக் கானவேதை
வளமையுடன் நாதாக்கள் செய்யும்வேதை
நட்டமென்ன சமுசாரிக் கானவேதை
நயமுடனே இவ்வேதை சுருக்கம்பாரே.
விளக்கவுரை :




