HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1406 - 1410 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1406 – 1410 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1406 – 1410 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1406. தங்கமது பசும்பொன்னாம்
வர்ணமொத்த தயங்காது காவிக்குமுப்புக்கேகா
அங்கமுடன் வாதத்துக்
குறுதியாச்சு அப்பனே சித்தர்முனி செய்வாரப்பா
புங்கசித்தி ரெட்டுடனே
பெறுவதாகும் போதமெட்டுங் கொள்ளுவதும் ஞானியாவான்
சிங்கமென்ற குருபீடம்
பிரமபீடம் சிறப்பான சித்தருட மகிமைபாரே
விளக்கவுரை :
1407. மகிமையாம் துருசுடைய
களங்குமார்க்கம் மகத்தான அவமுடனே வைதைபாரு
மகிமையா மயமதுவும்
வொன்றேயாகும் மதிப்பான துருசதுவு மெட்டதாகும்
மகிமையா மிரண்டுமொன்றாய்ச்
சேர்த்துக்கொண்டு மார்க்கமுட னமுரியினாலரைத்துக்
கொண்டு
மகிமையாம் ஜலந்தனிலே
கழுவிப்போடு மாசற்ற வயஞ்சேர்த்து சிவக்குந்தானே
விளக்கவுரை :

[ads-post]
1408. சிவப்பான வயஞ்சேர்ந்த
துருசுதன்னை செழிப்புடனே சட்டிதன்னில் பரப்பிப்போடு
தவப்பான வாழைநீரதிலேவிட்டு
தயவாக மூன்றுநாள் ரவியில்வைத்து
கயப்பறவே சூதமது
நாலுக்கொன்று கலதவே தானரைத்து மறுசட்டிட்டு
நயப்புடனே மேற்சட்டி
மூடிப்போடு நலமாக சீலையது வலுவாய்செய்யே
விளக்கவுரை :
1409. செய்துமே யடுப்பேற்றி யெரிப்பாய்சாமம் செழிப்புடனே யாறவிட்டு எடுத்துப்பாரு
நைதுமே செந்தூரமாகும்பாரு
நலமான ரசமதுதான் மேலேயேறும்
கொய்துமே செந்தூரம்
நாலுக்கொன்றி கொப்புடனே வெண்காரங் காலாய்க்கூட்டி
பெய்துமே மூசையிட்டு
சீலைசெய்து பிலமாகக் காயவைத்து வுருக்கிடாயே
விளக்கவுரை :
1410. உருக்கியே செம்பான
களங்குதன்னை வுத்தமனே வங்கமிட்டு வூதித்தீரு
நருக்கியே காரமிட்டு
வுருக்கிப்பாரு நயமான செம்பதுவுமாகும்பாரு
பெருக்கியே வெள்ளியது
நாலுக்கொன்று பேரான செம்பதுவு வொன்றேசேர்த்து
பருக்கியே தானுருக்கி
யெடுத்துப்பாரு பதமான மஞ்சளது மட்டந்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments