HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5541 - 5545 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5541 – 5545 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5541 – 5545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5541. காண்பிக்க யடியேனும் மனதுவந்து கருத்துடனே மாண்பர்களைக்கேட்டபோது
வீண்பான சிறுபால போகநாதா
விட்டகுறையிருந்ததினால் இங்கேவந்தாய்
ஆண்மைகொண்டு வந்ததினால்
உந்தனுக்கு வப்பனே சாபமது தருவோமென்றும்
தீண்பான வாக்கினைகள்
செய்வோமென்றும் திறமையுடன் எந்தன்பேர் கேட்டிட்டாரே
விளக்கவுரை :
5542. கேட்கவே யடியேனும்
பிரமைகொண்டு கெவனமுடன் காலாங்கிசீஷனென்றேன்
மீட்கவே யடியேனுங்
குளிகைபூண்டு மேதினியெலாம் சுற்றியிங்கேவந்தேன்
காட்கவே விலாடபுரங்
காணவென்று தகமையுடன் போர்களத்தில் வந்தேனப்பா
ஆட்கொண்டு யெந்தனையு
மாசீர்மித்து வன்புடனே பாதுகாக்க வென்றிட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
5543. இட்டேனே மாண்பர்களைக்
கண்டுயானும் எழிலான வஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
அட்டதிசை தான்புகழும்
அதர்வனத்தை அன்புடனே எந்தனுக்கு வோதினார்கள்
சட்டமுடன் பிரணவத்தின்
தழைகள்பூண்டு தாக்கான மரந்தனிலே காப்புகொண்டு
விட்டதொரு யெதிராளி பேரைமாறி
விருட்சமென்ற மூலிதனில்காண்பித்தாரே
விளக்கவுரை :
5544. காண்பித்தார் விலாடபுரந்
தன்னிலப்பா தண்மையுள்ள போர்க்களத்தில் அதிகமாண்பர்
ஆண்மையுடன் எதிராளி
பேரைச்சொல்லி அங்ஙனவே மாந்திரீக பிரணவத்தால்
வீண்பழிக்கு யாளாகா
வாகாமற்றான் விட்டகுறை இருந்ததொரு சாபத்தாலே
நீண்படவே மாந்திரீக
தாந்திரீகத்தால் நிலையான போர்க்களத்தை வென்றிட்டாரே
விளக்கவுரை :
5545. வென்றாரே மூலியிட
விருட்சத்தாலே வேகமுடன் கோடானகோடிபேரை
சென்றதொரு வித்தைகளை
எந்தனுக்கு சிறப்புடனே போதித்து வதிதஞ்செய்தார்
குன்றான கோடிவித்தை
யானுங்கண்டு கொற்றவனே குளிகையது பூண்டுகொண்டு
தன்றான கருமான
வித்தையெல்லாம் தகமையுடன் தானறிந்து வந்தேன்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments