சிலப்பதிகாரம் 3461 – 3480 of 5288 அடிகள்
3461. வென்றி வெங்கதிர் புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்
தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்
பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
விளக்கவுரை :
[ads-post]
3471. முகிழ்த்தகைச் சாலிஅயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக்
விளக்கவுரை :




