சீவக சிந்தாமணி 1101 – 1105 of 3145 பாடல்கள்
1101. நெய்த் தலைக் கருங்குழல் நிழன்று எருத்து அலைத்தர
முத்து அலைத்து இள முலை முகம் சிவந்து அலமரக்
கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண்
மைத்தலை நெடுந் தடம் கண் மங்கையர் மயங்கினர்
விளக்கவுரை :
1102. கோதை கொண்ட பூஞ்சிகை கொம்மை கொண்ட வெம்முலை
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து
ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம்பனி உகுத்து
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர்
விளக்கவுரை :
[ads-post]
1103. செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும்
அம்பொன் மாலை யோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர்
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார்
விளக்கவுரை :
1104. பூ அலர்ந்த தாரினான் பொற்பு வாடும் ஆயிடின்
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடுங் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அவ் வயிறு அதுக்கினார்
விளக்கவுரை :
1105. தேன் மலிந்த கோதை மாலை செய் கலம் உகுத்து உராய்க்
கால் மலிந்த காம வல்லி என்னது அன்னர் ஆயரோ
பால் மலிந்த வெம் முலைப் பைந்துகில் அரிவையர்
நூல்மலிந்த நுண்ணுசுப்பு நோவ வந்து நோக்கினார்
விளக்கவுரை :




