சீவக சிந்தாமணி 1161 – 1165 of 3145 பாடல்கள்
1161. மலைத் தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலைத் தொகை வேலினானைக் கொல்லிய கொண்டு போந்தான்
நலத்தகை அவனைக் காணான் நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கிச்
சிலைத் தொழில் தடக்கை மன்னற்கு இற்றென செப்பு கின்றான்
விளக்கவுரை :
1162. மன்னனால் சீறப்பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம்
என் இனிச் சொல்லிச் சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம்
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மைத்
துன்னுபு சூழ்ந்து தோன்றச் சொல்லுமின் செய்வது என்றான்
விளக்கவுரை :
[ads-post]
1163. வாழ்வதோர் உபாயம் நாடி மதி உடம்பட்டு வல்லே
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனைத் தொடர்ந்து பற்றிப்
போழ் படப் பிளந்து வாளின் புரட்டி இட்டு அரியக் கண்டே
ஆழ்கல மாந்தர் போல அணி நகர் அழுங்கிற்று அன்றே
விளக்கவுரை :
1164. காய்சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிதும் மொய்த்து மழையினோடு இருளும் காற்றும்
பேசின் தான் பெரிதும் தோன்றப் பிழைத்து உய்யப் போதல் அஞ்சி
வாசம் கொள் தாரினானை மார்பு போழ்ந்து உருட்டி இட்டேம்
விளக்கவுரை :
1165. அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம்
திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம்
ஒருவர் இவ் உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்
பெரிது அரிது இவனைக் கொன்றாய் பெறுக எனச் சிறப்புச் செய்தான்
விளக்கவுரை :




