Homeசீவக சிந்தாமணிசீவக சிந்தாமணி 1956 - 1960 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1956 – 1960 of 3145 பாடல்கள்

சீவக சிந்தாமணி 1956 – 1960 of 3145 பாடல்கள்

seevaga-chinthamani

1956. பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையில் குங்குமம்
சுந்தரப் பொடி தெளித்த செம் பொன் சுண்ணம் வாள் நுதல்
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே

விளக்கவுரை :

1957. நன் மணிச் சிலம்பினோடு கிண் கிணிந் நகந் நகும்
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து
மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே

விளக்கவுரை :

[ads-post]

1958. வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள்
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூங்குழல்
தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவரப்
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூங்கொடியின் நோக்கினாள்

விளக்கவுரை :

1959. மந்தார மாலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீம்தேன்
கந்தாரம் செய்து களி வண்டு முரன்று பாடப்
பந்து ஆர்வம் செய்து குவளைக் கண் பரப்பி நின்றாள்
செந் தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள்

விளக்கவுரை :

1960. நீர் தங்கு திங்கள் மணி நீள் நிலம் தன்னுள் ஓங்கிச்
சீர் தங்கு கங்கைத் திரு நீர்த் தண் துவலை மாந்திக்
கார் தங்கி நின்ற கொடி காளையைக் காண்டலோடு
பீர் தங்கிப் பெய்யா மலரின் பிறிது ஆயினாளே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments