HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 6936 - 6940 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 6936 – 6940 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 6936 – 6940 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6936. காணவே பட்சியென்ற தீர்த்தங்
கண்டேன் கருவான சங்லினுட தீர்த்தங்கண்டேன்
பூணவே சந்தனமாந் தீர்த்தங்
கண்டேன் புகழான வியாசமுனி தீர்த்தங் கண்டேன்
மாணவே மகதேவர் தீர்த்தங்
கண்டேன் மகத்தான பச்சையென்ற தீர்த்தங்கண்டேன்
கோணவே திருப்பாலின்
தீர்த்தங்கண்டேன் தோறாத வண்டூரன் தீர்த்தமாமே  
விளக்கவுரை :
6937. தீர்த்தமாங் கரியமால்
தீர்த்தங் கண்டேன் திறமான நாகேஸ்வர தீர்த்தங்கண்டேன்
பூர்த்தியாய் பரமசிவ
தீர்த்தங்கண்டேன் புகழான பாகவத தீர்த்தங்கண்டேன்  
கீர்த்தியுள்ள செங்கண்மால்
தீர்த்தங்கண்டேன் கெடியான புண்ணியத் தீர்த்தங்கண்டேன்
பார்த்தேனே சடாயுவென்ற
தீர்த்தங்கண்டேன் பாங்கான வச்சிரவல்லி தீர்த்தந்தானே
விளக்கவுரை :

[ads-post]
6938. தானான குசலமென்ற
தீர்த்தங்கண்டேன் தாக்கான யமுனையென்ற தீர்த்தங்கண்டேன்
கோனான வகஸ்தியனார்
தீர்த்தங்கண்டேன் குணமான வன்னியனார் தீர்த்தங்கண்டேன்
தேனான மல்லியென்ற
தீர்த்தங்கண்டேன் தெளிவான வனுமாரின் தீர்த்தங்கண்டேன்
பானான காசியென்ற
தீர்த்தங்கண்டேன் பாங்கான கைலங்கிரி தீர்த்தம்பாரே
விளக்கவுரை :
6939. பாரேதான் செண்பகத்தின்
தீர்த்தங்கண்டேன் பாங்கான கைகேசி தீர்த்தங்கண்டேன்
நேரேதான்கறுப்பண்ணர்
தீர்த்தங் கண்டேன் நெடிதான கிட்கிந்தா தீர்த்தங் கண்டேன்
கூரேதான் அஷ்டமென்ற
தீர்த்தங் கண்டேன் குணமான ஜெகமோகினி தீர்த்தங்கண்டேன்
திரேதாயின் திருவல்லி
தீர்த்தங்கண்டேன் திறமான கற்பத்தின் தீர்த்தங்கண்டேனே 
விளக்கவுரை :
6940. காணவே இன்னம்வெகு
தீர்த்தமுண்டு கண்மணியே விலாடமென்ற தீர்த்தங்கண்டேன்
பூணவே இரணியனார்
தீர்த்தங்கண்டேன் புகழான புஜண்டரிட தீர்த்தங்கண்டேன்
வேணபடி திருமாலின்
தீர்த்தங்கண்டேன் விருளான கும்பமென்ற தீர்த்தங்கண்டேன்
நீணவே காளிங்க
தீர்த்தங்கண்டேன் நிஷ்களங்க சொர்ணமென்ற தீர்த்தந்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments