சித்த வைத்திய அகராதி 2251 – 2300 மூலிகைச் சரக்குகள்
உலாத்திமரம் – ஊழலாத்திமரம்
உலாமாமரம் – கொழுமிச்சைமரம்
உலிமணிச்செடி – நாயுருவிச்செடி
உலுகத்தண்டுச்செடி – கீரைத்தண்டுச்செடி
உலுவச்செடி – வெந்தயச்செடி
உலுவாசகெந்திச்செடி – தைவேளைச்செடி
உலுவாசீரகம் – பெருஞ்சீரகம்
உலுவாவிகச்செடி – கரிவேப்பிலை
உலூகசமரம் – குங்கிலியமரம்
உலூகலப்பூ – குங்குமப்பூ
உலோசிக்கொடி – பேய்ப்பசளை
உலோசிதமரம் – சந்தனமரம்
உலோசிதம் – சந்தனம்
உலோடகமரம் – ஒட்டறைமரம்
உலோமசம் – சடாமாஞ்சில்
உலோமதகரிமரம் – கல்லாலமரம்
உவர்ச்சங்கஞ்செடி – முட்சங்கு
உவர்ச்சாறுநீறு – பூநீறு
உவர்நீர் – பூநீர்
உவர்ப்பறுகு – உப்பறுகு
உழலாத்திமரம் – ஊழலாத்தி
உழவணிகச்செடி – பொன்னாங்கண்ணிச்செடி
உழிஞைச்செடி – சிறுபூளைச்செடி
உழிஞ்சில்மரம் – அழிஞ்சில்மரம்
உளுந்துப்பயறு – கரும்பயறு
உள்ளி – வெங்காயம்
உள்ளிச்சுவேதம் – வெள்வெங்காயம்
உள்ளுலத்தீதக்கீரை – அகத்;தி
உள்ளுலவமரம் – சித்தொடுவை
உள்ளொட்டியிலைச்செடி – பிசினொட்டியிலைச்செடி
உறக்கமரிமரம் – பீநாறிமரம்
உற்பலக்கொடி – கருநெய்தல்
உற்பலசாகிதமரம் – கருவாகை
உற்பலசாணல் – பெருங்காயம்
உற்பலவனதைவேர் – சிவதைவேர்
உனத்தகுச்செடி – குறிஞ்சா
உனத்திதம்போக்கிச்செடி – கற்றுளசிச்செடி
உன்மத்தகிச்செடி – கொடிக்குறிஞ்சாச்செடி
உன்மத்தகோரச்செடி – கல்வாழைச்செடி
உன்மத்தஞ்செடி – ஊமத்தன்
உன்மந்தக்கொடி – செவ்விண்டு
உன்னதிமரம் – அழிஞ்சில்மரம்
உன்னமாகதச்செடி – புல்லாமணக்குச்செடி
உன்னயவங்கப்புல் – பீனசப்புல்
உன்னலாகச்செடி – பின்தொடரி
உன்னயப்புல் – சோனைபடபுல்
உன்னிமரம் – ஏரழிஞ்சில்மரம்
ஊகடன்மரம் – முருங்கைமரம்
ஊகண்டகச்செடி – கடலைச்செடி
ஊகத்தைச்செடி – ஊமத்தை




