HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5571 - 5575 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5571 – 5575 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5571 – 5575 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5571. இருந்தாரே வெகுகாலம்
காலாங்கிநாதர் எழிலான வையகத்து மாண்பர்முன்னே
பொருந்தவே வதிசயங்களெல்லாங்
கண்டார் பொங்கமுடன் இறந்தவர் கணக்குங்கண்டார்
திருந்தவே யவர்கண்ட
கணிதமப்பா தீர்க்கமுடன் எந்தனுக்கு அருளினார்பார் 
குருந்தமிழா மாசிரியர்
முனிவர்தாமும் கூறவில்லை நூல்தனில் கூறாரின்றே
விளக்கவுரை :
5572. இன்றான சாத்திரத்தின்
விருப்பமெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் சித்தர்தாமும்
குன்றான மலைபோலே கோடிநூல்கள்
கூறினார் வையகத்து வதிசயங்கள் 
சென்றதொரு வையகத்து
சேதியெல்லாம் சிலருரைத்தார் சிலர்மறைத்தார் தேசமாண்பர்
வென்றிடவே அடியேனும்
மனதுவந்து விருப்பமுடன் மறைத்ததெல்லாம் வெளியிட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
5573. இட்டேனே காலாங்கி சொன்னநீதி எழில்பெறவே புலிப்பாணி மைந்தாகேளு 
பட்டதொரு படுகளத்தின்
மாண்பர்சேதி பாரினிலே விதியினால் மடிந்தோர்சேதி
சட்டமுடன் எந்நாயன்
காலாங்கிநாதர் சாங்கமுடன் எடுத்துரைத்த தொகையைத்தானும்
வட்டமுடன் நபியுரைத்த
தோப்புதன்னில் வளமான வையகத்துத் தொகையுந்தானே
விளக்கவுரை :
5574. தானான நபிநாயன்
சாத்திரத்தில் சாற்றினார் வெகுகோடி வதிசயங்கள்
கோனான யேசுவின்தன்
வேதந்தன்னில் கூறினதோர் வையகத்து மாண்பர்சேதி
பானான பரலோகமடைந்தசேதி
பட்சமுடன் அவர்நூலுங் கண்டாராய்ந்து
மானான என்குருவாங்
காலாங்கிசுவாமி மார்க்கமுடன் எந்தனுக்கு உரைத்தார்தாமே
விளக்கவுரை :
5575. காணவே சீனபதி மாண்பருக்கு
கருவாக அடியேனும் மனதுவந்து
தோணவே மூலமென்ற பாஷைதன்னில்
திரட்டியதோர் தொகைமுழுதும் யானுங்கண்டு
வேணபடி பதினென்பேர்
நூலாராய்ந்து விருப்பமுடன் உபதேசஞ் செய்தேன்யானும்
நீணவே யுந்தனுக்கு யோதவல்லோ
நீட்சியுடன் மனதுவந்து எண்ணினேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments