HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5056 - 5060 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5056 – 5060 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5056 – 5060 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5056. பனிகுவார் எந்தன்குரு நாதாவென்பார் பாரினிலே வெகுகோடி சித்துவென்பார்
துணிவுடனே ஜாலமல்ல
சிருஷ்டியென்பார் தோய்ந்தபொருளுள்ள தொருகருவேயென்பார்
கணிவுடனே காயாதி கற்பங்கொண்ட
கைலாசநாதமுனி கடவுளென்பார்
மணிபோன்ற லோககுரு
விவர்தானென்பார் மாசற்ற சற்குருவா மென்பார்பாரே
விளக்கவுரை :
5057. பாரப்பா யின்னமொரு
கருமானங்கேள் பாரினிலே எல்லவரும்பயந்துவோட
ஆரப்பா ஆச்சரியமானவித்தை
வப்பனே அறிவுள்ளான் அறிவான்பாரு  
சீரப்பா பிரதிவா மெழுகினாலே
சிறப்புடனே கத்தியொன்று செய்வாய்தானும்
நேரப்பா செம்பருத்தம்
சப்பார்த்துப்பூ நெடிதான செம்பாளைப் பழத்தைவாங்கே
விளக்கவுரை :

[ads-post]
5058. வாங்கியே சார்பிழிந்து
மன்னாகேளு மகத்தான இரும்பினுட கத்திமேலே
தூங்கியே திரியாதே
புத்திவானே துடிப்புடனே சாரதனைப்பூசிப்பூசி
மாங்குபெற ரவிதனிலே
காயவைத்து பான்மையுடதன்னையே பதனம்பண்ணி
சாங்கமுடன் சபைகூட்டி
மைந்தாகேளு சட்டமுடன் ஜாலம்விளையாடுவாயே
விளக்கவுரை :
5059. ஆடுவாய் சபையார்முன்
செப்பக்கேளு வப்பனே யோர்சிறுவன்புத்திவானாய்
தேடியே கொண்டுவந்து
கூட்டத்துள்ளே தெளிவுடனே யவன்கழுத்தில் நிம்பழந்தன்னை
சாடியே கழுத்திலே நிம்பழத்தை
சட்டமுடன் தான்தறித்து கயறுபூண்டு
வாடியே திரியாமல்
மயங்கிடாமல் மன்னவனே கத்திகொண்டு யரிகுவாயே
விளக்கவுரை :
5060. அரிகையிலே யெலுமிச்சை
பழரசந்தான் வப்பனே ரத்தமது போலேசாயும்
கிரியையிது மெய்க்கிரியை
சாலவித்தை கீர்த்தியுள்ள வித்தையிது என்பார்பாரு
சரியான ஜெகஜால
மிதுவேயென்பார் தாரணியில் செய்பவர்கள் இதைபோலுண்டோ
குரியான ரத்தமது ஜாலவித்தை
கொற்றவனே கழுத்தறியும் வித்தைதானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments