HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5231 - 5235 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5231 – 5235 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5231 – 5235 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5231. காண்பித்தார் மாண்பருக்கு
வினோதவித்தை களிப்புறவே போகரிஷிநாதர்தாமும்
ஆண்பிள்ளை புலிப்பாணி
எந்தன்பாலா வப்பனே யுந்தனுக்கு வினோதஜாலம்
நண்பான பானையது பாண்டமப்பா
நவிலவே யானுரைப்பேன் மைந்தாகேளு
சாண்பான தவளமது கலசம்போல
சட்டமுடன் செய்துமல்லோ செப்பக்கேளே
விளக்கவுரை :
5232. செப்பவென்றால் நாவில்லை
பாவுமில்லை ஜெகதலத்தில் நாதாக்கள் சொன்னதில்லை
ஒப்பமுடன் பாண்டமது
செய்துமல்லோ ஒளிவான நறுவளியமேபழத்தையப்பா
இப்புவியில் மாண்பர்களுக்
கறியாமற்றான் யெழிலான பழமதுவைப் பாண்டத்துள்ளே
அப்பியே பூசியல்லோ காயப்போடு
அங்ஙனவே செய்யுமுறை வறையக்கேளே
விளக்கவுரை :

[ads-post]
5233. கேளப்பா ஜலமதனை பாண்டமிட்டு செப்புகிறேன் கட்டுயென்ற கொடிதானப்பா
பாளப்பாப் போகாமல்
யெனையுங்கூட்டி பாங்குபெற சார்பிழிந்து ஜலத்தினுள்ளே
நாளப்பா போகாமல் அப்போதேதான்
நலம்பெறவே சார்பிழிந்து சீனிபோட்டு
ஆலேதான் எல்லவரும்
பார்த்திருக்க வப்பனே பாண்டமதை வுடைத்திடாயே
விளக்கவுரை :
5234. உடைக்கவே ஜலமதுதான் வூறல்போல
வுத்தமனே இறுகியல்லோ வெண்ணைபோலாம்
படைசேர்ந்த கொலுமுகத்தில்
இந்தஜாலம் பாலகனே செய்துமல்லோ வெண்ணையீவாய்
தடையறவே மாண்பரெல்லாங்
கண்டுயேங்கி தகமையுடன் பொசித்தல்லோ யுன்னைமெச்சி
சடைபோன்ற தம்பிரான்
மகுத்துவந்தான் தாரிணியில் இவர்போலுமில்லை யென்பாரே
விளக்கவுரை :
5235. என்னவே வேணதொரு பொருளுமீவார்
எழிலான மாந்திரீகரென்றுமல்லோ
துன்னவே யுந்தனுக்கு
சோடசாரம் தோறாமல் செய்தல்லோ தனமுமீவார்
நன்னயமாய் வேதாந்த
சித்துவென்று நாட்டினிலே யுந்தமக்குப் பேருண்டாகும்
பன்னவே பலபேரும்
போற்றுவார்கள் பாலகனே நீயுமொரு சித்தனாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments