HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1696 - 1700 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1696 – 1700 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1696 – 1700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1696. மாடான சண்டிகளை விட்டுநீங்கி
மார்க்கமுடன் குளிகைகொண்டு பார்க்கவந்தேன்
காடான வனாந்திரங்கள்
குகைகள்கண்டேன் கனமான சித்தரிட மார்க்கம்பார்த்தேன்
கோடான கோடிமுறையாவும்
பார்த்தேன் குறிப்புடனே பொன்னகரம் கண்டுவந்தேன்
சேடான பகவானால் சொல்லலாகா
சிறப்பான பொன்னகரங் கண்டேன்தானே
விளக்கவுரை :
1697. கண்டேன் சதாசிவத்தின் கோயில்கண்டேன் கைலங்கிரிவாசரை யான்கண்டதில்லை
தொண்டுசெயும் ரிஷிமுனிவர்
பாதங்கண்டேன் தோராத வர்ச்சனைகள் யாவும்பார்த்தேன்
அண்டரண்டசராசரங்க
ளிதற்கீடல்ல ஆதிசேடன் தன்னாலுங் காணலாகா
தெண்டமுடன் மேற்புரம்
வாசல்வந்தேன் தேவரிஷிமுனியென்றொருவர் கண்டேன்தானே
விளக்கவுரை :

[ads-post]
1698. முனியான ரிஷிசித்தர்
யானுங்கண்டேன் மூலஸ்தானப் பெருமை கோயில்கண்டேன்
கனியான வடவாசல்
சேர்வைகண்டேன் தாக்கான பொன்கோபுர வாசல்கண்டேன்
தொனியான வாத்தியங்கள்
வழங்கக்கண்டேன் தோரான கண்ணபிரா னூஞ்சல்கண்டேன்
இனியான தடாகங்கள் படிகளெல்லாம்
இயலான தங்கமது வர்ணமாமே
விளக்கவுரை :
1699. ஆமேதான் வண்ணங்க
ளெல்லாம்பார்த்தேன் அதற்கப்பால் பூமியிட நாதங்கண்டேன்
தாமேதா னின்னகரம் பூநீரப்பா
தாக்கான சித்தர்களும் கண்டமார்க்கம்
போமேதான் முந்நூறு
காதந்தானும் பொலிவான பூநீறுவிளையும்பூமி
தாமேதான் கண்டுவந்தேன்
பூநீர்தன்னை நாட்டிலே கண்டவர்களில்லைதாமே
விளக்கவுரை :
1700. தானேதான் கண்டமட்டும்
குளிகைகொண்டேன் தயவுடனே மாணாக்கள் பிழைக்கவென்று
நானேதான் சித்தர்முனி
சொன்னநூலை நலமுடனே யாராய்ந்து வளமுங்கண்டு
மானேதான் தேர்ந்தெடுத்தேன்
இந்ததேசம் மகத்தான தேசங்களிதற்கீடல்ல
பானேதான் முன்சொன்ன
தேசமெல்லாம் பாங்கான பூநீறுக்காதியாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments