அகத்தியர் பன்னிருகாண்டம் 336 – 340 of 12000 பாடல்கள்
336. எட்டான சோடசமாம் பதினாறும்பார்
யெழிலான நந்தி பதினாறும்பாரு
மட்டான சோடசமாம் ரெண்டுபாரு
மகத்தான கலைகள் பதினாறும்பாரு
திட்டமுடன் நந்திபதி னாறும்பாரு
திறமான வழலையது முப்பத்திரெண்டு
சட்டமுடன் பார்த்தவர்க்குச் சிவயோகங்கிட்டும்
சதாகாலஞ் சாயுச்சிய மெட்டுந்தானே.
விளக்கவுரை :
337. தானான சிவயோகம் பதினாறும்பார்
தாக்கான சோடசமு முப்பத்திரெண்டு
வேனான தன்வந்திரி யிருபத்தினாலு
மிக்கான கக்கிஷமு மொன்பதும்பார்
பானான பரம ரகசியந்தானெட்டு
பாரினிலே பார்த்தவனுஞ் சித்தனாவான்
மோனான மோட்சவழி யறியலாகும்
மூதுலகில் துறைகண்ட சித்தனாமே.
விளக்கவுரை :
338. ஆமேதான் தன்வந்திரிக் காவியத்துக்
காயிரத்துச் சுருக்கமது யிருபதாகும்
நாமேதான் சொன்னபடி யாராதாரம்
அப்பனே சுருக்கமது பார்க்கவேண்டும்
தாமேதா னவரவர்கள் சொன்னவாக்கு
தப்பாது ஒவ்வொரு கோர்வைதானும்
மோமேதான் வீண்காலம் போக்காமாற்றான்
பொங்கமுடன் பார்ப்பவனே சொரூபனாமே.
விளக்கவுரை :
339. சொரூபமாங் கமலர்சொன்ன தீட்சையப்பா
சுத்தமுட னறுபத்து நாலும்பாரு
அரூபமென்ற தன்வந்திரி கலைதான்பாரு
அப்பனே பதினாறுக் குள்ளடக்கம்
உரூபமாம் நடராசர் சொன்னநீதி
உகந்த தொருதீட்சையது யெட்டும்பாரு
நிரூபமென்ற காயாதி கற்பந்தானும்
நிட்சையுடன் பார்த்தவனே புனிதனாமே.
விளக்கவுரை
340. புனிதனாம் சுப்பிரமணியர் தீட்சையப்பா
புகழான மார்க்கமது பதினாறும்பார்
வனிதமுடன் கௌதம ரிடியார்தாமும்
வாக்குறைத்த காயகற்ப மெட்டும்பாரு
கனிவுடனே யேகாந்தம் பதினாறும்பாரு
காட்சியுடன் மாட்சிமைகள் பெறவேயாகும்
துணிதமுள்ள சுந்தரனார் தீட்சையப்பா
சுத்தமுடன் முப்பத்தி ரெண்டும்பாரே.
விளக்கவுரை :




