HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1466 - 1470 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1466 – 1470 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1466 – 1470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1466. நன்றான வர்ச்சனைகள்
யாவுந்தேர்ந்து நாதாக்கள் பூசிக்கும் நிலையைப்பார்த்து
குன்றான
பிராணாயந்தன்னிற்சென்று கொடிதான காமத்தை நிவர்த்திசெய்து
பன்றான பரபூசை சிவபூசையாவும்
பாங்கான ஞானத்தின் சுடலைத்தாண்டி
வன்றான மாயசமு சாகரத்தை
மறந்தவனே சித்தரிலினி லொருவனாமே
விளக்கவுரை :
1467. ஆமப்பா வின்னமொரு
கருமானங்கேள் அப்பனே சங்குயென்ற பாஷாணந்தான்
தாமப்பா திருகள்ளி
பாலைவாங்கி தப்பாமற்றான்சுருக்கு சாமம்நாலு
வேமப்பா கொடுத்தவுடன்
கட்டிப்போகும் வேகமுடன் கடுஞ்சுருக்கு சொல்லப்போமோ
நாமப்பா மெழுகுவகை
போக்குசொல்வோம் நாதாக்கள்மறைப்பையெல்லாம்
நவில்வேண்பாரே
விளக்கவுரை :

[ads-post]
1468. நவிலவே யானையென்னு
விலாங்குதன்னை நாட்டமுடன் காரமிட்டுத் தயிலமாக்கி
குவிலவே சிற்றண்ட
மஞ்சள்தானும் கூடவேதான்கூட்டி கலந்துகொண்டு
கவிலவே சங்கென்ற பாஷாணத்தை
கருவாக ஓட்டிலிட்டு சுருக்குதாக்கு
புல்லவே மெழுகாகும்
பாஷாணந்தான் நாட்டினார் லோகத்து மாந்தர்க்காமே
விளக்கவுரை :
1469. ஆமேதான் மெழுகெடுத்து
ரவியில்தாக்கு அப்பனே பத்துக்கு ஒன்றுபோடு
தாமேதான் ரவிதானும் வெளுத்துக்காணும்
தரித்தலே யெடைக்கிடைதான் வெள்ளிசேர்த்து
நாமேதான் சொன்னபடி வங்கஞ்சார
நயமாகவெள்ளியது வலுத்துப்போச்சு
போமேதான்
திராவகத்துக்குயிருமாச்சு போக்கான செம்பதுவும் கட்டிப்போச்சே
விளக்கவுரை :
1470. போச்சென்று விடுகாதே
மைந்தாகேளு பொங்கமுடன் மெழுகெடுத்து வெள்ளீயத்தில்
பாச்சவே பத்துக்கு
ஒன்றுதாக்கு பதமுடனே நீரதுவும் நீங்கிப்போகும்
மூச்சொன்று விடுகாதே
யின்னங்கேளு முக்கியமாய் மேற்சொன்ன வெள்ளீயத்தை
காச்சுடனே
வறுவகைஜெயநீர்தன்னில் களிப்புடனே மூன்றுமுறை வுருக்கிச்சாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments