HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 686 - 690 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 686 – 690 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 686 – 690 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

686. தானே படைத்திட வல்லவ னாயிடுந்
தானே யளித்திட வல்லவ னாயிடுந்
தானே சங்காரத் தலைவனு மாயிடுந்
தானே யிவனெனுந் தன்மைய னாமே
விளக்கவுரை :
687. தன்மைய தாகத் தழைத்த கலையினுள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்பொருள் காணுமே
விளக்கவுரை :

[ads-post]

9. வசித்துவம்
688. மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெல்லாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே
விளக்கவுரை :
689. தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மென்மைய தாகிய மெய்ப்பொருள்
கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே
விளக்கவுரை :
690. நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments