HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 10651 - 10700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10651 – 10700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 10651 – 10700 மூலிகைச் சரக்குகள்

பைன்சுமரம் – சீமை மரம்
பொக்கணபந் தூக்கிக்கொடி – முடக்கத்தான்கொடி
பொக்கலாங்கொடி – பெருமருந்துக்கொடி
பொக்கவிதைச்செடி – நாறுகரந்தைச்செடி
பொக்குலிப்பிசின் – சாலாம்பிசின்
பொங்கர்மரம் – இலவமரம்
பொங்காராமல்லிச் செடி – வர்ண அந்திமல்லிச்செடி
பொங்கிலீகச்செடி – நீர்முள்ளிச்செடி
பொடிக்கட்டுக்கொடி – சிறுகட்டுக் கொடி
பொடிச்சிகமரம் – நாரைமரம்
பொடித்தலைமரம் – விடத்தலைமரம்
பொடித்திரித்தாழை – தழுதாழைச்செடி
பொடிப்புகையிலை – நாசிகாசூரணப் புகையிலை
பொடிப்பூரிகக்கொடி – நிலக்கடலைக் கொடி
பொடுதலை – பெரும்பொடுதலைக் கொடி
பொடுதாசிப்பட்டை – புழக்கப்பட்டை
பொட்டளை – வெடியுப்பு
பொதினாக்கீரை – புதினாக்கீரை
பொதீலகப்புல் – பூனைப்புல்
பொத்தைக்கள்ளி – முப்பட்டைக்கள்ளி
பொத்தைப்புளிமரம் – பொந்தம்புளிமரம்
பொந்தம்புளி – பப்பரப்புளிமரம்
பொந்திகம் – பொறித்தேற்றாமரம்
பொய்கைநாரிநீர் – தாமரைக்கொடி
பொய்சொன்னான்பூ – தாழம்பூ
பொரி – பொரிக்காரம்
பொரிகாரம் – வெண்காரம்
பொரிப்பூண்டு – தேங்காய்ப்பூண்டு
பொரிமலர்மரம் – புங்குமரம்
பொரிமா – பொரியரிசிமா
பொருதாகிச்செடி – பெருந்தும்பைச்செடி
பொருதாகிப்பூ – நீலோற்பலப்பூ
பொருத்தவிக்கள்ளி – மான்செவிக் கள்ளி
பொரும்பிலிச்செடி – காணப்பயற்றுச்செடி
பொருவாகைமரம் – பெருவாகைமரம்
பொழுதுதிரும்பிச்செடி – சூரியகாந்திச்செடி
பொறிகடலை – சிறுகடலை, பொறித்தகடலை
பொறிக்காசாவரளி – மஞ்சலரி மரம்
பொறிக்காளான் – பேய்க்காளான்
பொறிக்கேதனப்புல் – மூகைப்புல்
பொறித்தேற்றாமரம் – பேய்த்தேற்றாமரம்
பொறிநீர் – விந்துநீர்
பொறிப்பூண்டு – தேங்காய்ப்பூண்டு
பொற்காசிகச்செடி – கொள்ளுச்செடி
பொற்காஞ்சகி – மஞ்சிட்டி
பொற்காஞ்சிரை – காஞ்சிரைமரம்
பொற்கூவலஞ்செடி – குட்டிவிளாச்செடி
பொற்கொன்னை – சரக்கொன்னைமரம்
பொற்கோபிதக்கொடி – மஞ்சள் வெற்றிலைக்கொடி
பொற்சீந்திற்கொடி – மஞ்சட்சீந்திற்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments