HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5391 - 5395 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5391 – 5395 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5391 – 5395 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5391. எண்ணவே முத்துமணி
சூரியன்போல் எழிலான காந்தியது என்னசொல்வேன்
பண்ணவே ரிஷிமுனிவர்
சித்தராலும் பாருலகில் முடியாது இந்தவேதை
நண்ணவே காலாங்கி
கடாட்சத்தாலே நாட்டினேன் சீனபதிமாண்பருக்கு
வண்ணமுள்ள வேதையிது
மகாசங்கந்தான் மார்க்கமுடன் பூநீரின் வேதையாமே
விளக்கவுரை :
5392. வேதையாமின்னமொரு
மார்க்கங்கேளு விருப்பமுடன் சொல்லுகிறேன் வுகந்துபாரு
பாதையாம் மூப்பென்ற
செந்தூரத்தை பலபலவாஞ் சாத்திரத்தில் மிகவுஞ்சொன்னார்
நீதையுடன் உப்பென்ற
செந்தூரத்தை நீட்சியுடன் உங்களுக்கு முகஞ்சொன்னதில்லை
சோதையாம் பலபலவாஞ்
சாத்திரத்தை தோறாமல் கண்டல்லோ துணிவுற்றேனே
விளக்கவுரை :

[ads-post]
5393. துணியான லவணமென்ற
செந்தூரந்தான் துப்புரவாய் யானுரைப்பேன் மைந்தாகேளு
கணிதமுடன் உப்பென்ற
கல்லுப்பல்லோ கருத்துடனே சேரதுதான் ஒன்றேயாகும்
பணிவுடைய குழியம்மி
தன்னிலிட்டு பாலகனே மூலிவகை செப்பக்கேளே
துணிவுடனே செவ்வல்லி பூச்சார்கொண்டு
சிறப்புடனே நாற்சாமமரைத்திடாயே
விளக்கவுரை :
5394. அரைத்துமே நாற்சாமமானபின்பு
வப்பனே பில்லையது தட்டியல்லோ
வரைந்ததொரு ரவிதனிலே
காயவைத்து வளமான சீலையது வலுவாய்ச்செய்து
திரைத்துமே கோழியென்ற
புடத்தைப்போடு தீரமுடன் செந்தூரமாகும்பாரு
யரைத்துமே யிப்படியே
பத்துமுறைபோடு பாங்கான செவ்வல்லி மூலிதாமே
விளக்கவுரை :
5395. மூலியா மின்னமொரு பாகங்கேளு
முனையான புலியாரைச் சாற்றினாலே
சலியாமல் தானரைப்பாய்
நாலுசாமம் சட்டமுடன் ரவிதனிலே காயவைத்து
மாலியுடன் வோட்டிலிட்டு
சீலைசெய்து மகத்தான ரவிதனிலே காயவைத்து
ஆவியது வாராமல் புடந்தானப்பா
வப்பனே கோழியென்ற புடந்தான்போடே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments