HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5396 - 5400 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5396 – 5400 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5396 – 5400 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5396. போடவே செந்தூர மென்னசொல்வேன்
பொங்கமுடன் நாதாக்கள் சொன்னதில்லை
நீடவே யிப்படி
பத்துபுடம்போடு நெடிதான செந்தூரமாகும்பாரு
தேடவே யின்னமொரு
மூலிசொல்வேன் தெளிவான செந்தூரமாகும்பாரு
கூடவே மூலியது தான்பிழிந்து
கொற்றவனே தானரைக்க வகையைக்கேளே
விளக்கவுரை :
5397. கேளப்பா மூலியது சாற்றினாலே கெடிதான வுப்பென்ற செந்தூரத்தை
மாளப்பா நாற்சாமம்
அரைத்துமேதான் மகத்தான வில்லையது தட்டியல்லோ
சூளப்பா ரவிதனிலே காயவைத்து
சுத்தமுடன் ஓட்டிலிட்டு சீலைசெய்து
ஆளப்பா கோழியென்ற
புடத்தைப்போடு வப்பனே செந்தூரமாகுங் காணே
விளக்கவுரை :

[ads-post]
5398. காணவே யிப்படியே
பத்துமுறைபோடு கயிலாச நாதருட செந்தூரந்தான்
தோணவே செந்தூரந் தனையெடுத்து
துப்புரவாய் ஜெயசூத மெடைக்குப்பாதி
வேணபடி தானெடுத்துக்
கல்வமிட்டு வேதாந்தத்தாய்தனை மனதிலுன்னி
நீணவே கல்வமதிலிட்டு மைந்தா
நீதியுடன் அரைப்பதற்கு வழிதான்கேளே
விளக்கவுரை :
5399. வகையான செந்தூர மரைப்பதற்கு
வண்மையுடன் ஆறுவகை ஜெயநீரப்பா
துகையான துருசு
வெடியுப்புக்காரம் தோற்றமுள்ள வருஞ்சாரம் கரியுப்பாகும்
பகையான சீனமது வொன்றுகூட்டி
பக்குவமாய் ஜெயநீருந்தானிரக்கி
மிகைபடவே தானரைப்பாய்
நாலுஜாமம் மேன்மையுடன் வில்லையது லகுவாய்த்தட்டே
விளக்கவுரை :
5400. தட்டியே ரவிதனிலே காயவைத்து
சாங்கமுடன் வில்லையது வோட்டிலிட்டு
சட்டமுடன் சீலையது
வலுவாய்ச்செய்து சாங்கமுடன் புடமதுவுங் கோழியாகும்
திட்டமுடன் தான்போட்டு
எடுத்துப்பாரு திறமான செந்தூர மாகும்பாரு
வாட்டமுள்ள செந்தூரந்
தனையெடுத்து வளமையுடன் முன்போல பகிர்ந்திடீரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments