HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4846 - 4850 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4846 – 4850 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4846 – 4850 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4846. நினைக்கையிலே யுந்தனுக்கு
வந்ததுன்பம் நிட்களங்க மாகவல்லோ ஜெயமுங்கொண்டு
தினகரன்போல் அவர்களுக்கு
புனிதவானாய் தீர்க்கமுடன் நீநினைத்த காரியங்கள்
சினமதுவும் வாராமல்
ஜெயமும்பெற்று சிறப்புடனே குளிகையது கொண்டுமேதான்
வனமெலாந் தான்திரிந்து
சிகரமட்டும் வரமுடனே தலைதனைவிட்டிறங்குவாயே
விளக்கவுரை :
4847. இறங்கியே எந்நாளும் கீர்த்திவானாய்
எழிலாக வையகத்திலிருந்துகொண்டு
துறவரத்தில் செல்லாமல்
இல்லரத்தில் துப்புரவாய் எந்நாளும் பாக்கியவானாய்
குறையதுவும் நேராமல்
குவலயத்தில் கொற்றவனே சீனபதிக்கு ஏற்றவானாய்
நிறுயுடனே வாழ்கவென்று
ஞானந்தந்தார் நீதியுடன் உபதேசஞ்செய்தார்தாமே
விளக்கவுரை :

[ads-post]
4848. தாமேதான் இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாபாரு
நாமேதான் சொன்னபடி
வஞ்சனந்தான் நலமான கிரிதனிலே சென்றேன்யானும்
போமேதான் சதாசிவனார்
ரிஷியைக்கண்டேன் பொங்கமுடன் சகலவரம் யானும்பெற்று
வேமேதான் சீனபதியேகுதற்கு
விருப்பமுடன் விடையதுவும் பெற்றேன்தானே
விளக்கவுரை :
4849. தானேதான் குளிகையது கொண்டுமல்லோ தண்மையுள்ள சீனபதி மாண்பருக்கு
மானேதான் அஞ்சனமாங்
கிரியில்வாழும் மகத்தான சதாசிவனார் ரிஷியார்சேர்வை
தேனேகேள் சீனபதிப்
பெண்களுக்கு தேற்றமுடன் உபதேசம் பெற்றதெல்லாம்
வானேகேள் குளிகையது
கொண்டுமல்லோ மகத்தான யிமயகிரி சென்றார்காணே
விளக்கவுரை :
4850. காணவே யின்னமொரு
மார்க்கம்பாரு கருவான புலிப்பாணி மைந்தாகேளு
தோணவே இமயகிரி பர்வதத்தில்
துப்புரவாய் குளிகைகொண்டு யானுமல்லோ
நீணவே எட்டாவது வரையிலப்பா
நீடான குளிகையது கொண்டுயானும்
வேணபடி கிரிதனிலே
செல்லும்போது விருப்பமுடன் குத்துக்கல் கண்டிட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments