HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4761 - 4765 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4761 – 4765 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4761 – 4765 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4761. சித்தான சித்துமுனி
மாதுதானும் சிறப்பான மாநிலத்திலதிசயங்கள்
மெத்தனவே செய்துமல்லோ
காயங்கொண்டு மேதினியில் சமாதிக்கு போனமாது
சத்தான லோகமதில்
அடியார்தம்மை சதாகாலம் வலதழித்த கன்னிமாது
முத்தான நாலுயுகங்
கடந்தசித்து மூவுலகில் ரேணுகைபோல் சித்துமுண்டோ
விளக்கவுரை :
4762. உண்டான ரிஷிகளெல்லாம்
யாகஞ்செய்யும் உதகமென்ற மலைதனிலேதானுஞ்சென்று
கண்டாளே ரேணுகையாள்
மாதுதானுங் களிப்பஉடனே நாதாந்த சித்துதம்மை
துண்டரிக மாகவல்லோ
தவங்கள்யாவும் துப்புறவாய் தானழித்து வசியம்பூண்டு
கொண்டபடி வாதமென்ற
மலைபோற்றங்கம் கொப்பெனவே தான்செய்து வாங்கினாரே
விளக்கவுரை :

[ads-post]
4763. வாங்கியே நவகோடி
சித்துதாமும் வண்மையுள்ள வாபரணப் பணிதியெல்லாம்
சாங்கமுடன் நவரத்தின
கசிதத்தாலே சட்டமுடன் பெற்றுவந்த மாயாசித்து
ஏங்கவே ரிஷிகளெல்லாம்
மதியம்பூண்டு யேமாந்து வாதமென்ற யேமந்தன்னை
பாங்குடனே தான்கொடுத்தார்
கோடிபொன்னை பட்சமுடன் ரிஷிமுதலோர் முனிவர்தானே
விளக்கவுரை :
4764. தானான ரேணுகையின்
சமாதிபக்கல் சட்டமுடன் மாண்பரெல்லாம் போவதுண்டு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாத கடாட்சத்தாலும்  
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலும் தேற்றமுடன் சமாதியிடம் யானுஞ்சென்றேன்
பானான நவகண்டரிஷியார்பாட்டன்
பதமதுவும் தப்பாமல் சென்றிட்டேனே
விளக்கவுரை :
4765. சென்றேனே ரேணுகையின் சமாதிபக்கல் செம்மலுடன் குளிகைகொண்டு யானுமல்லோ
குன்றான பருவதம்போல்
சமாதிகண்டேன் கொப்பெனவே சீனபதிப்பெண்கள்மாரே
நின்றேனே சிலகாலம்
சமாதிபக்கல் நீட்சியுடன் வடபாகங் கார்த்திருந்தேன்
தென்றலுடன் சப்தமது வசரீரிவாக்கு
செப்பமுடன் எந்தனுக்குக் கேட்கலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments